Tuesday, January 5, 2010

தெற்கு கடல் நோக்கி சாகர் நிதி கப்பல் பயணிக்கிறது

இந்திய தட்ப வெட்ப நிலை குறித்து ஆராய்ச்சி நடத்த தெற்கு கடல் நோக்கி சாகர் நிதி கப்பல் பயணிக்கிறது
தெற்கு நோக்கி சாகர் நிதி கப்பல் பயணிக்கயிருக்கிறது. வரும் திங்களன்று இந்திய தனது முதல் திட்டமிட்ட பயணத்தை தெற்கு கடல் நோக்கி கோபன்ஹேகன்
மாநாட்டின் முடிவுக்குபின் 2010 ஜனவரி 11ஆம் தேதி துவங்கவுள்ளது. இது தேசிய அன்டர்டிகா கடல் ஆராய்ச்சி மையத்தின் நான்காவது பயணமாகும். இந்த பயணமென்பது தட்ப வெட்ப மாற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆய்வுச் செய்வதற்காக திட்டமிடபட்டுள்ளது. இந்த பயணம் மூலம் இந்திய விஞ்ஞானிகள் முதல் முதலாக தெற்கு கடல் எல்லை பகுதியில் 55டிகிரி குளிரை பெருட்படுத்தாமல் பயணிக்கயுள்ளார்கள். இந்த சாகர் நிதி கப்பலானது பனிக்கட்டிகளை கிளித்துச் செல்லும் திறனுடையது. இது கோவாவில் இருந்து 25
விஞ்ஞானிகளை ஏற்றிக் கொண்டு ஜனவரி 11 அன்று மோரிசியாஸ் செல்லயிருக்கிறது. பின் அங்கு இருந்து தென்பகுதி செல்ல இருக்கிறது. இந்த பயணம் அடுத்த
ஏப்ரல் 2010ல் முடிவடையும். இதன் மூலம் விஞ்ஞானிகள் கடலில் ஏறாதாழ 20 ஆராய்ச்சிகள் முப்பத்தைந்து டிகிரியில் இருந்து ஆறுவத்தாறு டிகிரி குளிரில் தெற்குகடல் பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ளவுள்ளனர். சாகர்நிதி கப்பலில் பனிகட்டியிலிருந்து 6000 மீட்டர் அடியில் துலையிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள ஏதுவான உபாகரணங்கள் உள்ளது. அதுமட்டுமில்லமால் அங்கிருந்து வண்டல்கள் சேகரித்தும், வண்டல்கள் உருவாகுவதில் உள்ள மாற்றங்கள், நீரின் கனம் மற்றும் இதர தனி தன்மையில் வரையறை குறித்த தகவல்களை சேகரித்து அதை இதற்கு முன்பு சேகரிக்கப்பட்ட தகவல்களை ஒட்பிட்டு தற்போது ஏற்படும் தட்ப வெட்ப மாற்றங்களுக்கு காரணங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆராய்ந்து கண்டுபிடித்து உறுதிபடுத்தப்படும்.

Monday, January 4, 2010

வரலாற்றில் சென்னை

வரலாற்றில் சென்னை
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல்
பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக
விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத
போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்த பகுதி முதலில்
சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.
சென்னையில் அமைந்துள்ள‌ புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி
தேவாலையம்சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக
விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக
கருதப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522ஆம்
ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612ஆம்
ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.
1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான
பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான
குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.
ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை
மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது.
சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம்,
எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக்
கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது.
தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில்
அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக
இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின்
முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின்
ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார்.
பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4
மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746ம் ஆண்டில்
செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது.
1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை
நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள்
ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம்
அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. நகரின் பெயரான மதராஸ்
1996ம் ஆண்டு சென்னை மாற்றம் செய்யப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் வருடம் மொழி
வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி
மாநிலத்தின் தலைநகரானது. 1996ஆம் வருடம் தமிழக அரசாங்கம் மதறாஸ் என்ற
பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என
மாற்றம் செய்யப்பட்டது. வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ்
கோட்டை நிலத்தைபிரிட்டிஷார் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர்
பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள்
கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய
பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது.
டிசம்பர் 2004 சுனாமி தாக்கிய இடங்களில் சென்னையும் ஒன்றாகும்.
புவியியல்
சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள குளம்இந்தியாவின் தென்கிழக்கு
கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் ஆந்திரப்
பிரதேச மாநிலத்தின் அருகில் உள்ளது. சென்னை நகரின் கிழக்கில் வங்காள
விரிகுடா உள்ளது.
சென்னை நகரத்தின் பரப்பளவு 174 கி.மீசு. சென்னை மாவட்டமும், திருவள்ளூர்,
மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப்
பகுதிகளாக கருதப்படுகின்றன. சென்னை நகரின் அருகாமையில் மாமல்லபுரம்,
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம்,
ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய ஊர்கள் உள்ளன.
சென்னையில் வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதும் மிகுந்து
காணப்படுகிறது. சென்னையில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை 44.1˚
செல்சியஸ், குறைந்த வெப்பநிலை 15.8˚ செல்சியஸ். தென்கிழக்கு பருவமழையும்,
முக்கியமாக வடமேற்கு பருவமழையும் நகருக்கு மழை கொண்டு வருகிறது.
சென்னையில் வருடத்திற்கு சுமார் 1300 மி.மீ மழை பெய்கிறது.
சென்னையிலுள்ள புகழ்பெற்ற‌ மெரீனா கடற்கரை.கூவம், மற்றும் அடையாறு ஆகிய
நதிகள் சென்னை நகரின் வழியாக பாய்கின்றன. புழல் ஏரி, சோழவரம் ஏரி,
செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு
வரப்படுகிறது.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆகும்.
13 கி.மீ நீளம் உள்ள இக்கடற்கரை, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையின் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு
தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன் தெற்கில் அடையாறு
கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை
என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர்
கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.
சென்னை நகரின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன.
மத்திய சென்னை, சென்னையின் முக்கியப் பகுதியாகும். தென் சென்னையில் தகவல்
தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.
நிர்வாகம்
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம். 1913ல் ரிப்பன் துரையை
கௌரவப்படுத்தும் விதமாக கட்டப்பட்டது.சென்னை மாநகரின் நிர்வாகம் சென்னை
மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது. மாநகராட்சியின் தலைவர் மேயர் (மாநகரத்
தந்தை) என்று அழைக்கப்படுகிறார். இவர் தவிர 155 வட்டங்களிலிருந்து 155
மாமன்றஉறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போதைய மேயர் மா.
சுப்பிரமணியம் அவர்களும் துணைமேயர் சத்யபாமா அவர்களும்அக்டோபர் 29, 2006
முதல் இப்பதவியை வகித்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சி அலுவலகம்
ரிப்பன் கட்டடத்தில் உள்ளது.
தமிழக சட்டசபை சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளது.
சென்னையில் 18 தமிழக சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. வட சென்னையில்
திருவொற்றியூர்,ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.
நகர் (தனி), ராயபுரம் ஆகிய தொகுதிகளும், மத்திய சென்னையில்
வில்லிவாக்கம், எழும்பூர்(தனி), துறைமுகம், சேப்பாக்கம் -
திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளும், தென்
சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர்,
மயிலாப்பூர்,வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளும் உள்ளன.
இந்திய பாராளுமன்றத்தின் மூன்று தொகுதிகள் சென்னையில் உள்ளன. அவை வட
சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகியவை.
தமிழகம், மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது.
தமிழக காவல் துறையின் பிரிவான சென்னை மாநகர காவல்துறை சென்னையில் சட்டம்
ஒழுங்கை பராமரிக்கிறது. சென்னை மாநகர் முப்பத்தாறு காவல் பிரிவுகளாக
பிரிக்கப்பட்டுள்ளது. 121 காவல் நிலையங்கள் சென்னை மாநகரப் பகுதியில்
உள்ளன.
பொருளாதாரம்
சென்னை தரமணியிலுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காஆங்கிலேயர் ஆட்சிக்
காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை
விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன.
இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும்
சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள்
சென்னையில் உள்ளன.
1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப
நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப
நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடெல் பூங்கா
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். மேலும் சில த.தொ
பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. அம்பத்தூர்
மற்றும் பாடி பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ் (ஜிக்ஷிஷி),
அசோக் லெய்லாண்ட், ஹையுண்டாய் (பிஹ்uஸீபீணீவீ), போர்டு (திஷீக்ஷீபீ),
மிட்சுபிஷி (விவீtsuதீவீsலீவீ), டி.ஐ, எம்.ஆர்.எஃப், பி.எம்.டபிள்யூ
(ஙிவிகீ) போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன. சென்னையை
அடுத்த ஆவடியில் இந்திய ராணுவம் தொடர்பான பல நிறுவனங்களின் கிளைகள்
உள்ளன. இந்தியாவின் முக்கிய போர் பீரங்கியான அர்ஜுன் இங்கு
தயாரிக்கப்படுகிறது.
மக்கள்
பரங்கி மலையிலிருந்து காணப்படும் சென்னை மாநகரம்சென்னையின் மக்கள் தொகை
சுமார் 7.45 மில்லியன் ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418
மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர்.
கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25% மக்கள் குடிசைப் பகுதிகளில்
வசிக்கின்றனர்.
சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம்,
தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மார்வாரி,
வங்காளி, பஞ்சாபி , ஆகியவை பயனில் உள்ளன. அனால் தமிழிற்கு அடுத்த படியாக,
இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேச படுகிறது.
அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் ஆங்கிலம் அதிகமாக
பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலோ இந்திய மக்களும், மற்ற நாட்டவரும் சிறு
அளவில் காணப்படுகின்றனர்.
இங்கு பேசப்படும் பல மொழிகளின் கலவையில் உருவான மெட்ராஸ் பாஷை உள்ளூர்
மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களாலும், ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுனர்கள்
போன்றோராலும் ஒயிலாகப் பேசப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக
ஏற்றுக்கொள்ளப்படாத இந்த மொழி சிலரால் கொச்சை மொழியாக கருதப்படுகிறது.
கலாச்சாரம்
எழும்பூரில் உள்ள அரசு அருங்காடசியகம், மிஸீபீஷீ-ஷிணீக்ஷீணீநீமீஸீவீநீ
கட்டிடக்கலைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்; ஹென்றி இர்வினால் வடிவமைக்கப்
பட்டு, 1896ல் கட்டப்பட்டது.சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின்
பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும்
இங்கு கலந்து காணப்படுகிறது.
சென்னை பூங்கா நகரில் அமைந்துள்ள 'விக்டோரியா பப்ளிக் ஹால்்'.சென்னையில்
உள்ள கோலிவுட் என்றழைக்கப் படும் தமிழ் திரைப்படத் துறை இந்தியாவில்
பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரியது. தமிழ் திரைப்படப் பாடல்கள்
சென்னை மக்களால் மிகவும் ரசிக்கப் படுகிறது. தனியார் தொலைக்காட்சிகளிலும்
வானொலி அலைவரிசைகளிலும் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் அதிகம்
ஒலிபரப்பப் படுவதைக் காணலாம்.
இட்லி, வடை, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும் சமீபத்தில் மேற்கத்திய
நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா, பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில்
பிரபலமாய் உள்ளன.
சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல பழங்கால
கோயில்கள் உள்ளன. புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், சென்னை
சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்று
ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம்.
சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன
கட்டடங்கள் பெருகி வருகின்றன.
போக்குவரத்து
சென்னை போக்குவரத்து வரைபடம்சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின்
பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள்,
ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கும் நல்ல விமானப் போக்குவரத்து
உண்டு. சென்னை விமான நிலையம், இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும்
சரக்கு விமான நிலையமாகும்.
சென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும்
சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள்
போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.
சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ஆகியவை சென்னையின் இரு
முக்கிய ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், சென்னையின் வடக்கு, மற்றும்
மேற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது.
சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்கு சென்று வரும் ரயில்களால்
பயன்படுத்தப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்சென்னை புறநகர் ரயில்வே மூன்று
மார்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்,
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம் ஆகியவை.
இவை தவிர சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில்
திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு சென்று வர நல்ல சாலை
வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னையை கொல்கத்தா,
பெங்களூர், திருச்சி, பாண்டிச்சேரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களுடன்
இணைக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம்
ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும்.
சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களையும் இணைக்கும் பொதுப் போக்குவரத்து
வசதியாக சென்னை மாநகரப் பேருந்து செயல்பட்டு வருகிறது. சுமார் 2773
பேருந்துகள் 375 வழித்தடங்கள் மூலம் சென்னை நகரின் பகுதிகளை இணைக்கின்றன.
இது தவிர பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்களும் நகரத்தில் ஓடுகின்றன.
தகவல் தொடர்பு
தென்கிழக்காசிய கண்ணாடி நூலிழை மையங்களுள் ஒன்றான சென்னை இந்தியாவில்
தகவல் தொடர்பில் முதலிடம் வகிக்கிறது. இங்கு பி.எஸ்.என்.எல், டாடா
இண்டிகாம், ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி
இணைப்பு அளிக்கின்றன. பி.எஸ்.என்.எல், ஹட்ச், ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ்
ஆகிய நிறுவனங்கள் நகர்பேசி இணைப்பு அளிக்கின்றன. இது தவிர இந்நிறுவனங்கள்
அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் அளிக்கின்றன.
அனைத்து தேசிய, அனைத்துலக தொலைக்காட்சிகளும் சென்னையில் தெரிகின்றன. சன்
டிவி,சன் மியூசிக்,சன் நியூஸ்,கே டிவி, மக்கள் தொலைக்காட்சி, கலைஞர்
டிவி,கலைஞர் நியூஸ்,ராஜ் டிவி,ராஜ் நியூஸ்,ராஜ் டிஜிடல் ப்ளஸ், ஸ்டார்
விஜய், ஜெயா டிவி, ஜெயா விணீஜ், ஜெயா றிறீus,மிsணீவீ கிக்ஷீuஸ்வீ, எஸ்.
எஸ் மியூசிக், தூர்தர்ஷன் பொதிகை ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் அதிகம்
பார்க்கப்படுகின்றன. இரண்டு ஏ.எம், ஒன்பது பண்பலை சூரியன் பண்பலை,ரேடியோ
மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ, ரேடியோ ஒன், அஹா, பிக்,ரெயின்போ பண்பலை,
எப் எம் கோல்டு வானொலி அலைவரிசைகள் சென்னையிலிருந்து ஒலிபரப்பப்
படுகிறது.
கல்வி
சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம்சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும்
(மிஸீபீவீணீஸீ மிஸீstவீtutமீ ஷீயீ ஜிமீநீலீஸீஷீறீஷீரீஹ்-இந்தியத்
தொழில்நுட்பக் கல்லூரி), அதன் எதிரில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும் ,
இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுள் சிலவாகும். இவை
தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் சென்னையிலும் அதன்
சுற்றுப்புறங்களிலும் உள்ளன.
சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பல கலை,
அறிவியல் கல்லூரிகள் சென்னையில் உள்ளன. அவற்றுள் சென்னை மாநிலக் கல்லூரி,
லயோலா கல்லூரி, வைஷ்ணவ் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி போன்றவை
குறிப்பிடத்தக்கவை. இது தவிர என்.ஐ.எஃப்.டி (ழிணீtவீஷீஸீணீறீ
மிஸீstவீtutமீ ஷீயீ திணீsலீவீஷீஸீ ஜிமீநீலீஸீஷீறீஷீரீஹ்-தேசிய உடையலங்கார
தொழில்நுட்பக் கல்லூரி), ஏ.சி.ஜெ (கிsவீணீஸீ சிஷீறீறீமீரீமீ ஷீயீ
யிஷீuக்ஷீஸீணீறீவீsனீ-ஆசிய இதழியல் கல்லூரி), விணீபீக்ஷீணீs ஷிநீலீஷீஷீறீ
ஷீயீ ஷிஷீநீவீணீறீ கீஷீக்ஷீளீ (மெட்ராஸ் சமூகப்பணி கல்லூரி) போன்ற கல்வி
நிறுவனங்களும் உள்ளன.
வருடந்தோறும் பள்ளி இறுதித் தேர்வுகளில் இந்தியாவிலேயே சென்னை
மாணாக்கர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதைக் காணலாம்.
சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள்
(ழிணீtவீஷீஸீணீறீ ஞிமீஜீஷீsவீtஷீக்ஷீஹ் லிவீதீக்ஷீணீக்ஷீவீமீs) ஒன்று.
விளையாட்டு
சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம்மற்ற இந்திய நகரங்களைப் போல சென்னையிலும்
கிரிக்கெட்டே பிரபலமான விளையாட்டாகும். சென்னையிலுள்ள சேப்பாக்கம்
கிரிக்கெட் அரங்கம் 50000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது.
ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம் மற்றொரு முக்கிய
மைதானம்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம்
சர்வதேச ஏ.டி.பி பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபறுகின்றன.
விஜய் அமிர்தராஜ், ராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச
போட்டிகளில் முத்திரை பதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச்
சேர்ந்தவர்களே.
எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 4000 பேர் அமர்ந்து
பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இது செயற்கை தரை கொண்டது. 1995ஆம் ஆண்டு
இங்கு சாம்பியன் கோப்பை பந்தயத்தொடர் நடந்தது. 2005 டிசம்பரிலும்
இப்போட்டிகள் இங்கு நடைபெறும்.
ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கால்பந்து, தடகளப்போட்டிகள் போன்றவை
நடைபெறுகின்றன. இதன் வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில்
கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற
போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. 1996 ஆம் ஆண்டு தெற்காசிய
விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.
மூன்று கோல்ஃப் விளையாடும் இடங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் மோட்டர்
பந்தய போட்டிகள் நடைபெறும் களம் உள்ளது.
உயிரியல் பூங்காக்கள்
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலிகிண்டியில் உள்ள
உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுனர்
வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி வளாகத்திலும்
குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 80 மிருக வகைகள் உள்ளன.
சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது.
இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன்
ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.
பிரச்சினைகள்
மாசு மிகுந்த குடிநீர் மற்றும் குடிநீர் பற்றாக்குறை
அதிக மக்கள் தொகை அடர்த்தி
25% மக்கள் குடிசைப்பகுதிகளில் வாழ்வது
மாசு மிகுந்த சுற்றுப்புறச் சூழல்
வாகன நெரிசல்
மாசு மிகுந்த சாலைகள் மற்றும் சாலைகள் பராமரிக்கப்படாமை

Wednesday, December 30, 2009

33வது சென்னை புத்தகக் கண்காட்சி

33வது சென்னை புத்தகக் கண்காட்சி புதன்கிழமை (நேற்று) துவங்கியது. முதல்வர் கருணாநிதி புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 10ம் தேதி வரை ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் (பூந்தமல்லி) நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரில் நடைபெறுகிறது.
இந்த புத்தகக் கண்காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சேது சொக்கலிங்கம், செயலாளர் ராம லட்சுமணன் பொருளாளர் எஸ்.எஸ். ஷாஜகான் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:
கண்காட்சி அரங்கம் 1 லட்சத்து 75ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 5 வாயில்களுடன் 606 அரங்குகளில் 360 புத்தக நிறுவனங்கள் பங்க கொண்டு 6 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைச் செய்யப்படுகின்றன.
கண்காட்சி நாள்தோறும் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த கண்காட்சி நடைபெறும். நுழைவுக் கட்டணம் ரூ. 5 நுழைவு வாயில்களிலும் டிக்கெட் கவுண்டர் உள்ளது. மாணவர்களுக்கு இலவச அனுமதி சென்னை மற்றும் சுற்றுப்பகுதி பள்ளி மாணவர்களுக்காக 5 லட்சம் இலவச அனுமதி டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
நாள் தோறும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சிகளும் 6 மண முதல் 8.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், இலக்கிய சொற்பொழிவுகள் என பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ஜன-7ம் தேதி புரசைவாக்கம் அழகப்பா மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கூட மாணவர்களுக்கும், ஜன-8ம் தேதி ராணிமேரி கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுபோட்டி நடத்தி ரூபாய் 1000 முதல் ரூபாய் 5,000 வரை ரொக்கம், மாணவர்கள் விரும்பும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். அதேபோல 9ம் தேதி புத்தகக்காட்சி வளாகத்தில் 6 முதல் 13 வயது மாணவர்களுக்கு 3 பிரிவுகளில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
கண்காட்சிக்கு வருகை தரும் வாசகர்களின் தேவையை கருத்தில் கொண்டு குடிநீர், சிற்றுண்டி, கழிப்பிட வசதிகள் என 5 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வாசகர்கள் புத்தகங்களை வாங்க கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம்.
புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்களிடையே மனித நேயத்தையும் விழிப்புணர்வையும் உருவாக்க ரத்ததான முகாம். ரத்த சர்க்கரை பரிசோதனை முகாமும் நடைபெறுகிறது. 5லட்சம் சதுர அடி பரப்பளவில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு சுமார் 10 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விருது வழங்கும் விழா:
30வது புத்தகக் கண்காட்சி நடந்தபோது, முதல்வர் கருணாநிதி நன்கொடையாக வழங்கிய ரூபாய் 1 கோடி மூலம் கிடைத்த வங்கி வருமானத்தல் அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை வைப்புத் தொகை மூலம் கிடைத்த வட்டி வருவாயைப் பயன்படுத்தி 6 எழுத்தாளர்களுக்கு தலா ரூபாய். 1 லட்சம் பொற்கிழியுடன் பாராட்டுச் சான்றிதழும் முதல்வரால் வழங்கப்பட உள்ளது.
இந்த விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர்கள் வருமாறு: கட்டுரை - ச.வே. சுப்பிரமணியன், கவிதை - ஈரோடு தமிழன்பன், நாடகம் - ஆறு அழகப்பன், சிறுகதை - கு. சின்னப்ப பாரதி, தெலுங்கு இலக்கியம் - அபுரி சாயாதேவி, ஆங்கில இலக்கியம் - சோ.ந.கந்தசாமி. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் வழங்கும் பல்வேறு விருதுகளைப் பெற ஒ.ஆர்.சுரேஷ், வே.சுப்பையா, நா.தர்மராஜன்,குழ.கதிரேசன், எம்.முத்துசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-ஹேமா

Tuesday, December 29, 2009

ஆந்திர கவர்னர் நாராயண் தத் திவாரியின் செக்ஸ் விவகாரம்.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவதை மத்திய அரசு ஒத்தி வைத்ததைக் கண்டித்து ஆந்திராவில் ஒரு பக்கம் கலவரம் நடந்துக் கொண்டிருக்கும் வேலையில் ஆந்திர கவர்னர் நாராயண் தத் திவாரியின் செக்ஸ் விவகாரம். மறுபக்கம் ஆந்திர மாநிலத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது.
தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப் போவதில்லை என்று மத்திய அரசு கூறியது. இதை தொடர்ந்து தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் 70 எம்.எல்.ஏக்களும் 13 ஆந்திர அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினமா செய்துள்ளனர். இந்த நிலையில் ராஜினாமா செய்த அமைச்சர்களின் 9 பேர் டில்லி சென்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் மூகர்ஜியை சந்தித்து உடனே தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தனி மாநில கலவரத்தில் இறங்கிய பொதுமக்களும் மாணவர்களும் 150க்கும் மேற்பட்ட பஸ்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதற்கிடையில் 2 ரயில் நிலையங்கள் தீ வைக்கப்பட்டடுள்ளன. உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த 8 மாணவர்களை மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இப்படி எரியும் ஆந்திராவில் எந்த பிரச்சனையையும் கவனிக்க நேரமில்லாமல் இளம் பெண்களுடன் உல்லாசத்தில் ஆந்திர கவர்னர் திவாரி.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்தான் இந்த என்.டி.திவாரி (வயது 86) 1980, 90களில் இந்திய அரசியலின் உச்சத்தில் இருந்தவராம். ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு 1991ல் இவர்தான் பிரதமராவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டவர். அப்போது நடந்த தேர்தலில் 800 ஒட்டுகளில் தோல்வி அடைந்தால் அவரால் அந்த உயரிய பதவிக்கு வரமுடியவில்லை. இந்திய அரசியல் தலைவர்களில் 2 மாநிலங்களில் முதல்வராக இருந்த ஒரே நபர் என்ற சிறப்பும் இவருக்கு இருக்கு. 1976 முதல் 1986 வரை உத்தரபிரதேச முதல்வராக 3 தடவையும், உத்தரபிரதேசத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டபோது அம்மாநில முதல்வராக 2002 முதல் 2007 வரை இருந்தார். ராஜீவ்காந்தி ஆட்சியில் நிதி, வர்த்தகம், வெளியுறவுத்துறை என பல முக்கிய பதவிகளில் இருந்தவர்.
கடந்த ஆண்டு அவர் ஆந்திரா கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆந்திர ஜோதி, ஏபிஎன் தொலைக்காட்சி சானல் கவர்னர் திவாரி 3 பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த செக்ஸ் காட்சிகளை பல தடவை மீண்டும், மீண்டும் ஒளிபரப்பியது. திவாரியின் சொந்த மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ராதிகா என்ற பெண் காண்டிராக்டர் ஆந்திராவில் சில கனிம சுரங்கங்களை குத்தகைக்கு எடுக்க கவர்னரின் தயவை நாடி.னார். ஆனால் திவாரி ஏமாற்றியதால் இந்த 3 பெண்களையும் செக்ஸ் உல்லாசத்தின் போது மைக்ரோ கேமராவையும் கேமரா செல்போனையும் வைத்து கவர்னர் லீலையை பதிவு செய்ததாக ராதிகா கூறினார். இந்த தகவல்களை கேட்டதும் ஆந்திர மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர்.
ஏற்கனவே ரோகித் சர்மா என்ற வாலிபர் என் தந்தை என்.டி.திவாரி என்று கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பு ஏற்படுத்தினார். அவர் தொடந்த வழக்கை டில்லி கோர்ட்டு சமீபத்தில் தான் தள்ளுபடி செய்துள்ளது.
இது தவிர முறையற்ற பல திருமணங்களை செய்து கொண்டதாக இவர் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் இருக்கிறது. 85 வயதிலும் சபலத்தை விடாதவராகவும் கவர்னர் மாளிகையை மன்மதலீலைகளில் அரங்கமாகவும் பயன்படுத்தி இவர் கடைசியில் மைக்ரோ கேமரா மூலம் வசமாக சிக்கிக் கொண்டார்.
நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை எழுப்பிய இந்த காட்சி ஏ.பி.என். ஆந்திர ஜோதி என்ற தெலுங்கு சேனல் ஒளிபரப்பியதை அடுத்து ஒரு மணி நேரத்தில் ஆந்திர ஐகோர்ட்டில், இந்த காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என கவர்னர் மாளிகை சார்பில் தடை உத்தரவு பெறப்பட்டது.
ஆனால் செக்ஸ் புகாரில் சிக்கிய கவர்னரின் லீலைகளை பார்த்த மக்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போரட்டத்தல் ஈடுபட்டனர். இதில் அவருடைய உருவபொம்மை எரிக்கப்பட்டும். அவருக்கு எதிராக அனைத்து கட்சித் தலைவர்களும் போராட்டத்தல் ஈடுபட்டனர்.
இந்த சூழ்நிலையில், உடல் நிலத்தை கருத்தில் கொண்டு பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஆந்திர கவர்னர் திவாரி கடித்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய கவர்னராக இருந்து வரும் இக்காடு சீனிவாசன் லஷ்மி நரசிம்மன் கூடுதலாக ஆந்திர மாநிலத்தை கவனிப்பார் என ராஷ்ட்டிரபதிபவன் வட்டாரம் கூறியுள்ளது.

Sunday, December 27, 2009

புலம்ப வைக்கும் போக்குவரத்து

புலம்ப வைக்கும் போக்குவரத்து
அன்றாட அவசியத் தேவையாகிவிட்ட பேருந்து போக்குவரத்து - குறிப்பாக அரசுப் போக்குவரத்து - தமிழகத்தில் எப்படி இருக்கிறது? மக்களின் அனுபவம் என்னவாக இருக்கிறது?
தமிழகத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்து, விரைவு போக்குவரத்து, கோவை கோட்டம், மதுரை கோட்டம், கும்பகோணம் கோட்டம், விழுப்புரம் கோட்டம், சேலம் கோட்டம் என ஏழு அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. அவை சார்ந்த 19 போக்குவரத்துக் கழக மண்டலங்களின் கீழ் சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் இயங்குகின்றன. கிட்டத்தட்ட 1,25,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஒரு நாளுக்கு 80 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோ மீட்டர்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். நாளொன்றுக்குப் பயணக் கட்டணமாக வசூலாக அரசுக்கு 1.8 ஆயிரம் கோடி ரூபாய் வருகிறது.
விரைவுப் பேருந்துக் கட்டணம், புறநகர் பேருந்துக் கட்டணம், மாநகரப்பேருந்துக் கட்டணம், நகரப்பேருந்துக் கட்டணம் என நான்கு வகையான கட்டணங்கள் உள்ளன. இதில் எல்.எ°.எஸ், பாயிண்ட் டு பாயிண்ட், நான் ஸ்டாப் என்றெல்லாம் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. சொகுசுப் பேருந்து, தற்போது குளு குளு பேருந்து என்றும் அதிகக் கட்டணப் பேருந்துகள் ஓடுகின்றன.
இவற்றிலாவது கட்டணமுறை என்ன என்பது புரிகிறது. அப்படி எதுவுமே புரியாத ஒரு கட்டண முறையும் இருக்கிறது. அண்மையில் ஒரு பயணி சென்னை காசி தியேட்டர் நிறுத்தத்தில் ஏறி, கிண்டியில் இறங்கினார். துரிதவண்டி பேருந்து அதற்கு ரூ. 3.00 கட்டணம் என நினைத்தால் ரூ. 4.50 வசூலிக்கப்பட்டது. ஏன் என்று நடத்துனரிடம் கேட்டபோது அவர், “இது ஜம்பிங் ஸ்டாப் கணக்கு” என்று சொல்லியிருக்கிறார். சத்தியமாக ஜம்பிங் ஸ்டாப் என்றால் என்ன என்று எந்தப் பயணிக்கும் புரியவில்லை.
சென்னையில் 1947ல் அரசின் 30 நகரப் பேருந்துகள் ஓடின. 1972ல் போக்குவரத்துக்கழகம் தொடங்கப்பட்டது. அப்போது அதில் 1029 பேருந்துகள் ஓடின. 1994ல் 2332 பேருந்துகளுடன் பல்லவன் போக்குவரத்துக் கழகம், அம்பேத்கர் போக்குவரத்து கழகம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 2001ல் மீண்டும் ஒரே பெருநகரப் போகுவரத்துக் கழகமாக மாறியது.
சென்னையில் 2005ஆம் ஆண்டு மொத்தம் இருந்த 2,500 பேருந்துகளில் 1500க்கு மேற்பட்டவை சாதாரணக் கட்டண வண்டிகளாக இருந்தன. ஆனால் இன்று சென்னையில் 25 டிப்போக்களில் 3,084 பஸ்கள் உள்ளன. இவற்றில் 600 மட்டுமே சாதாரணக் கட்டண பஸ்கள். மீதியுள்ள 2,484 பஸ்களிலும் வண்ணப் வண்ண பெயர்ப் பலகைகளைக் கொண்ட எல்.எஸ்.எஸ் (350), எம். சர்வீஸ் (700), டீலக்ஸ் (850), ஏ.சி. பஸ்கள் (30) என்ற எண்ணிக்கையில் தொடங்கி 100க்கும் மேற்பட்ட ஏ.சி. ப°கள் உள்ளன. இதில் அதிகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அவற்றின் முகப்பிலுள்ள பெயர்ப்பலகைகளை வைத்துத்தான் அவற்றின் தரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். பயணம் செய்து பார்த்தால் ஒரு சில புதிய வண்டிகளைத் தவிர மற்றதில் எந்த வித்தியாசமும் தெரியாது.
அப்பலகை வெள்ளை நிறமானால் அது சாதாபஸ். முதல் ஸ்டேஜ் கட்டணம் 2 ரூபாய். ஆனால் அதைப் பார்ப்பது மிகவும் அரிது. பலகை மஞ்சள் நிறமானால், குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நிற்கும். அதற்கு எல்.எஸ்.எஸ். பஸ் என்று பெயர். அதற்கு முதல் ஸ்டேஜ் கட்டணம் ரு. 2.50. அதிகமான மக்கள் இருந்தாலும் அந்த இடத்தில் நிற்காமல் போகும், அதுதான் இதன் சிறப்பு. பச்சை நிறப்பலகையானால் அது துரித வண்டியாம். அதன் முதல் ஸ்டேஜ் கட்டணம் ரூ.3.00. சென்னை போலப் போக்குவரத்து நெரிசல் நிறைந்த மாநகரில் இது எவ்வளவு துரிதமாகப் போக முடியும் என்பது ஓட்டுநருக்கும் தெரியாத ரகசியம்.
வெள்ளைப் பலகையிலேயே (எம்) என்று எழுதியிருக்கும். அதன் அர்த்தம் யாருக்கும் தெரியாது. ஆனால் கட்டணம் மட்டும் சாதா கட்டணத்தைவிட ஒரு ரூபாய் அதிகம்.
நீல நிறப் பலகையானால் அது சொகுசு பஸ். அதில் உட்கார இடம் கிடைக்காமல் நிற்பவருக்கு என்ன சொகுசு கிடைக்கப்போகிறதோ! அதன் முதல் ஸ்டேஜ் கட்டணம் ரு.5.00.
கலைஞர் அரசின் பரிசு ஏ.சி. பஸ். இதன் சிறப்பு குளு குளுவென்று இருப்பது. அதன் முதல் ஸ்டேஜ் கட்டணம் 10 ரூபாய். அதிகபட்சமாக 63 ரூபாய் வரை உள்ளது. ஆனால் பாவம் 75 லட்சம் மதிப்புள்ள ஏ.சி வால்வோ பஸ்கள் வசூல் ஒருநாள் இலக்கான ரூ.18 ஆயிரம் எட்ட முடியாமல் நஷ்டத்தில் ஓடுகின்றனவாம்.
அரசு பேருந்தில் மொத்தம் தினந்தோறும் 43.55 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். இதில் 70 சதவீதத்தினர் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான். அவர்கள் இவ்வளவு கட்டணத்தில் குளு குளு ப°சில் பயணம் செய்ய இயலாதவர்கள். அவர்களுக்கு வாய்த்ததெல்லாம், வியர்வையில் நெருக்கித் தள்ளுகிற, எந்த நேரத்திலும் பிக்-பாக்கெட்டுக்கு வழி வகுக்கிற சாதா ப°கள்தான். வசதியுள்ள சிலருக்காக மட்டும் ஏ.சி.ப° ஓடுமானால் ஏன் நஷ்டம் ஏற்படாது?
ஒரே தடத்தில், ஒரே வேகத்தில் செல்லும் இந்தப் பேருந்துகளில், முகப்புப் பலகையின் நிறத்தை மட்டும் மாற்றிவிட்டு, மாறுபட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுவது நியாயமா என்ற கேள்வி மக்களிடையே பரவலாக உலவி வருகின்றது. நீல நிறப்பலகையோடு சொகுசு பஸ்ஸாக ஓடும் பேருந்து, சில சமயங்களில் பச்சைப் பலகையோடு விரைவு வண்டியாகவும் அவதாரம் எடுக்கிற காட்சியைக் காணமுடியும். முன்பு மகளிருக்காகவும் பள்ளிக் குழந்தைகளுக்காகவும் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டன. இப்போது அவை என்ன ஆகின என்பது தெரியவில்லை.
கழகப் பேருந்துகளின் இந்த நிலைமைகள் குறித்துப் புலம்புகிறார்கள் பொதுமக்கள். “எந்த பஸ்சுல எவ்வளவு காசு கேப்பாங்கன்னு தெரியல. ஏறின பிறகு அந்த ஸ்டாப்புல நிக்காதுன்னு சொல்லுவாங்க. ஆதனால ஷேர் ஆட்டோவே மேல். 5 ரூபாய் கொடுத்தால் போதும், எங்க சொல்லுறமோ அங்க நிறுத்துவாங்க,” என்றார் ஒரு பயணி.
மக்கள் விரும்பியதால் சொகுசுப் பேருந்துகள் விடப்பட்டதாகக் கூறப்பட்டது. எவ்வளவோ கோரிக்கைகளைப் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் ஊர்வலமாகச் சென்று அமைச்சரிடம் மனுக்களாகக் கொடுத்தும், அக்கோரிக்கைகள் குப்பைத் தொட்டிகளுக்கே போகின்றன. ஆனால் சொகுசுப் பேருந்து வேண்டும் என்று மக்கள் கேட்டார்களாம், இவர்கள் கொடுத்தார்களாம்!
பீக் ஹவர் எனப்படும் நெருக்கடி நேரங்களில் சாதாரண பஸ்கள் கண்களில் தென்படுவதே இல்லை. சொகுசுப் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாகத் திட்டமிட்டு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த மறைமுகமான, முன்னறிவிப்பு இல்லாத கட்டண உயர்வு என்பது பயணிகளிடமிருந்து சட்டப்பூர்வமாக பிக்-பாக்கெட் அடிக்கிற வேலை அல்லவா?
கடும் போகுவரத்து நெருக்கடி உள்ள சென்னையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தாமல், நல்ல சாலைகளை உருவாக்காமல் செகுசு பஸ்கள் என்ற பெயரில் உயர்கட்டணம் வசூல் செய்வது எந்த விதத்தில் நியாயம்? இவர்கள் கொண்டு வந்த இந்த சொகுசு பஸ்கள் ஒரே ஆண்டில் டப்பா பஸ்களாக மாறிவிட்டன. அதனை இப்போது ‘எம்’ சர்வீசாக பயன்படுத்துகின்றனர்.
இப்படிப்பட்ட கட்டண கொள்ளைகளும் குழப்பங்களும்தான் எளிய மக்களை அவர்களுக்கான அரசுப் போக்குவரத்து சேவையிலிருந்து அந்நியப்படுத்துகின்றன. மக்களின் கோபம் என்னவோ போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மீதுதான் பாய்கிறது. இது தொடர்பாக போக்குவரத்து தொழிற்ச் சங்க (ஏஐடியுசி) பொதுச் செயலாளர் லட்சுமணன் என்ன கூறுகிறார்?
“இப்படி கட்டணத்தை உயர்த்தியும், கூடுதல் பேருந்துகளை விட மறுத்தும், மக்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வசதியை செய்யாமலும் தொழிலாளர்களையும் மக்களையும் அரசு மோதவிடுகிறது. விபத்தில் சிக்குகிறவர்களுக்கு உரிய காலத்தில் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதும் இன்னொரு கொடுமை. ஆனால் விபத்துள்ளானால் விசாரணையின்றி ஒட்டுநரின் உரிமம் பறிக்கப்படுகிறது. அப்படியே தொழிலாளர் நீதிமன்றத்தில் நியாயம் கிடைத்தாலும் அதனை அமல்படுத்தமால் மேல் முறையிடு செய்யப்படும். ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஒய்வூதிய நலன்களைக் கூடத் தராமல் இழுத்தடிக்கிறார்கள்,”
“ இதிலும் கொடுமை பழுதடைந்த பஸ்களைச் சரிசெய்ய ஒரு ஒர்க் ஷாப் கூட இல்லை என்பதுதான். இது போன்ற நெருக்கடிகளை உருவாக்கி மறைமுகமாகத் தனியாரிடம் கொடுக்கும் தந்திரத்தை அரசு கையாள்கிறது,”
தினசரி போக்குவரத்தில் பயணம் செல்லக் கூடிய பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதின் காரணமாக அவரவர்கேற்ப வகையில் வாகனத்தை பயண்படுத்துகின்றனர். இதன் விளைவு போகுவரத்து நெரிசல், சுற்றுச் சூழல் மாசுபடுவதாகும். இவற்றை எல்லாம் கட்டுபடுத்த பொதுப் போக்குவரத்துதான் தீர்வு. என்றார்.
கடந்த மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலின்போது திடீரென எல்லா வகையான பேருந்துகளிலும் சாதாரணக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தலையிட்டதும் அது மாற்றப்பட்டது. அப்படியானால் அரசு மனது வைத்தால் அனைத்துப் பேருந்துகளிலும் சாதாரணக் கட்டணம் வசூலிக்க முடியும் என்பது தெரிகிறது அல்லவா? அரசு ஏன் மனது வைக்கக் கூடாது?
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியில் போக்குவரத்துக்கு ஒரு தலையாய பங்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அந்த போக்குவரத்தில் பேருந்துகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதில் ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ வேண்டியது அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்தான். ஆனால் தனியாரின் தான்தோன்றித்தனமான கட்டணக் கொள்ளைக்கு அல்லவா அரசு முன்மாதிரியாக இருக்கிறது! மக்களின் இந்த ஆதங்கத்தை மதித்து இனிமேலாவது அரசு குறைந்த, சீரான கட்டண விகிதங்களோடு பேருந்துகளை இயக்குமா?